திருவள்ளுவர் பொத்தக இல்லம் 1978 ஆம் ஆண்டு கடத்தூரில் சொல்லக்கப் புலவர் நெடுமிடல் அவர்களால் தொடங்கப்பட்டு தொடக்க காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான தமிழ்நாடு அரசு பாட நூல் கழக நூல்களை விற்பனை செய்யும் முகவராக கடத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்தோம்.
தொடர்ந்து 1996யில் தருமபுரியில் இடம் மாற்றப்பட்டு, முன்னணி தமிழ் பதிப்பகங்களின் பொத்தகங்களை தருமபுரி பகுதியில் விற்பனை செய்து வந்தோம்.
2000 ஆண்டு முதல் தமிழ் எழுத்துகள் கற்க, கற்பிக்க அறிவியல் அணுகுமுறையில் ஆன
அறிவுத் தென்றல் தமிழ் வாசகம் (அரும்பு)
அறிவுடைநம்பி தமிழ் வாசகம் (எறும்பு)
செல்லக்கிளி தமிழ் வாசகம் (கறும்பு ) ஆகிய பாடநூல்களை வெளியிட்டு வருகின்றோம்.
2006 ஆம் ஆண்டு முதல் கருநாடக மாநிலத்தில் தமிழ்வழியில் ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கு பொத்தகங்கள் மற்றும் பயிற்சி ஏடுகளை வெளியிட்டு வந்தோம்.
தற்பொழுது தகடூர்/தருமபுரி மாவட்டத்தின் படைப்புகளை ஆவணப்படுத்தி வெளிக்கொண்டு வரும் நோக்கத்கோடு தகடூர் புத்தகப் பேரவை, தகடூர் அதியமான் வரலாற்று சங்கம், தகடூர் மாவட்ட படைப்பாளர் சங்கம் ஆகிய அமைப்புகளோடு இணைந்து பொத்தகங்களை வெளியிட்டு வருகின்றோம்.
தருமபுரி மாவட்டத்தின் அறிவியக்கமான தகடூர் புத்தகப் பேரவையுடன் இணைந்து, மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் புத்தக கண்காட்சிகளை நடத்தி வருகின்றோம்.